பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் – பாக். பிரதமர்

281
imran9.3.19

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் பல நாடுகள் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.

பாகிஸ்தான், தன் மண்ணில் இயங்கி வருகிற பயங்கரவாத குழுக்கள் எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தாதபடிக்கும், பிராந்திய நிலைத்தன்மையை ஊக்குவிக்கிற வகையிலும் தொடர்ச்சியான மற்றும் மீற முடியாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழக்கூடாது, அவர்களுக்கு நிதி உதவிகள் போய்ச்சேராதவாறு தடை செய்யப்பட வேண்டும் என்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரையை பாகிஸ்தான் நிலை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணிலிருந்து எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டின் பிரதமர் திரு. இம்ரான் கான் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of