ருசியாக பிரியாணி சாப்பிட்டால் சாம்பியன் ஆகமுடியாது ? – வாசிம் அக்ரம்

158

உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் அந்த அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

இந்நிலையில், முன்னாள் இடது கை வேகபந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை விளாசியுள்ளர்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of