முடியாது ! முடியாது ! – மறுப்பு சொன்ன மம்தா | Mamata Banerjee

172

சமீபத்தில் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்தது.

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அபராத உயர்வுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த இந்த வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என எங்கள் மாநிலத்தின் அரசு அதிகாரிகள் கருதுவதால் இதை இங்கு அமல்படுத்தமாட்டோம்.” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of