பம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh

593

காக்க முட்டை படத்தின் மூலம் அனைவரின் மனதை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் அண்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பிலில் பேசியபொது, முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க. இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை.

ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்கலை. தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லாரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை.

நம்ம தமிழ் பெண்கள் நடிக்க வந்த அவங்களை மதிக்க மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும்.

Advertisement