வாக்குச்சீட்டு முறையை 100 சதவீதம் நடைமுறைப்படுத்துவோம் – சித்தராமையா

146

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்

தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல. இதுகுறித்து நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகுட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of