ஆட்சிக்கு வர பொய்யான வாக்குறுதிகளை அளித்தோம் – நிதின் கட்காரி

1774

ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்சியில் பேசிய அவர், கடந்த தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை என்றார். எனவே நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்ததாகவும், தாங்கள் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் அதற்கு பொருப்பேற்றிருக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.

ஆனால், மக்கள் தங்களை ஆட்சியில் அமர வைத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கேட்பதால், அதைப்பற்றி கவலைப்படாமல், சிரித்துக்கொண்டே கடந்து செல்வதாக கூறினார். நிதின் கட்காரியின் இந்த பேச்சு பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிதின் கட்காரியின் இந்த பேச்சு பா.ஜ.க.வின் உண்மை தன்மையை காட்டுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Advertisement