மறுதேர்தல் தேர்தல் வேண்டும், தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் கடிதம்

222

ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.

இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதேபோல் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சில பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.