துளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah

303

அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தியாவின் பாதுகாப்பில் துளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார். நமது படை வீரர்களின் ஒரு சொட்டு ரத்தம்கூட வீணாகப்போக விட மாட்டோம்.

எல்லை தாண்டிச்சென்று இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல்கள் மற்றும் விமானப்படை தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை மாறி விட்டது. இந்தியாவின் பலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, ஒன்றுபட்ட இந்தியா என்ற நோக்கத்தை அடைவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of