நாங்கள் நெருக்கடிக்கு உள்ளானோம் – அலெக்ஸ் கேரி

300
alex-carey

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நான்கு ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் இரு அணிகளும் 2 – 2 என்ற சமநிலையில் உள்ளது.

நாளைய நடக்கவிருக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், முதன்முறையாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா முதன்முறையாக தொடரை கைப்பற்றும். தற்போது தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் விளையாட ஆவலாக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸ் கேரி கூறுகையில் ‘‘தொடரின் தொடக்கத்தில் நாங்கள் நெருக்கடிக்கு உள்ளானோம். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தோம். ஆனால் தற்போது 2-2 எனத் தொடரை சமன் செய்துள்ளோம்.

தொடரை தீர்மானிக்கும் நாளைய போட்டியில் விளையாட ஆவலாக இருக்கிறோம். இந்தியா தோல்வில் இருந்து மீண்டு வீறுகொண்டு திரும்பும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம்’’ என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of