எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம்

871

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவை சேரும் என கூறினார்.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைப்பு தமிழகத்தின் மிகப்பெரிய எழுச்சி என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியை குறை கூற கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை என கூறினார்.

சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

20 ரூபாய் நோட்டுக்காரன் யார் என்று சொன்னால் ஆர்.கே.நகர் மக்களுக்கு தெரியும் என்று டிடிவி தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடி பேசினார்.