வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் – வெங்கய்ய நாயுடு – வெங்கய்ய நாயுடு

139

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசித்து விவாதித்து அதன்பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்பதையே, இந்த அரசாங்கமும் விரும்புகிறது என தெரிவித்தார்.

அதன்படியே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவை  நிறைவேற்றப்பட்டதாக வெங்கய்ய நாயுடு கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் எதிரானது இல்லை என்றும், அது குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாமலேயே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கும், எல்லா உரிமைகளையும் சட்டம் வழங்கியுள்ளதாக கூறிய அவர், ஆனால் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of