அரிவாளுடன் அலப்பறை செய்த நபர்..! – கழிவறையில் வழுக்கி விழுந்தார்..!

920

நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையில் வெட்டரிவாளுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி, கழிவறையில் வழுக்கி விழுந்து கையை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமும் ஆயிரகணக்கான மக்கள் வந்து செல்லும் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடைக்குள் வெட்டரிவாளுடன் புகுந்து இந்த ரவுடிகள் செய்த அட்டகாசம் அங்கிருக்கும் ஊழியர்களையும், பொதுமக்களையும் குலை நடுங்க செய்தது..!

மிரட்டி விட்டு காரில் தப்பிச்சென்ற ரவுடிகளை, சிலர் விரட்டி சென்று பிடிக்க முயல, காரை சாலையில் நிறுத்தி விரட்டியவர்களை அரிவாளால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கட்சிகள் வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

நெல்லையில் மூன்று கொலை நடந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக பட்டபகலில் கையில் வெட்டரிவாளுடன் இந்த ரவுடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் காவல்துறையினருக்கு கடும் சவாலாக அமைந்தது.

காவல் ஆணையர் பாஸ்கரனின் உத்தரவின் பேரில் விசாரணையை முன்னெடுத்த போலீசார் கையில் அரிவளுடன் கெத்து காட்டிய தாழையூத்தை சேர்ந்த ரவுடி முருகானந்தம் என்பவனை அதிரடியாக கைது செய்தனர்.

அவனை பிடித்து விசாரித்த போது சில தினங்களுக்கு முன்பு தான் நெய் பாட்டில் ஒன்றை திருடிக் கொண்டு தப்ப முயன்ற போது அங்கிருந்த காவலாளிகள் கையும் களவுமாக பிடித்து விட்டதாகவும், தன்னை பிடித்து போலீசில் ஒப்படைத்ததால் அந்த கடையில் உள்ளவர்களை வெட்டிக் கொலை செய்வதற்காக வெட்டரிவாளுடன் சென்றதாக தெரிவித்தான்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ரவுடி முருகானந்தம் அங்குள்ள கழிவறையில் வழுக்கி விழுந்த போது வலது கையில் முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அரிவாளுடன் பலரை நடுங்க செய்த திருட்டு ரவுடி முருகானந்தத்தின் வலது கைக்கு அங்கு மாவுக்கட்டு போடப்பட்டது.

100க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்கள் உள்ள பெரிய கடை ஒன்றிக்குள் கையில் அரிவாளுடன் பட்டபகலில் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியம் இவர்களை போன்ற ரவுடிகளுக்கு எங்கிருந்து வருகின்றது என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது..!

Advertisement