10 மாவட்டங்களில் மழை.. ஒரு மாவட்டத்தில் கனமழை.. – வானிலை மையம்

1962

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வானிலை நிலவரம் பற்றி, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது.

அதில், அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement