14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

305

தமிழகத்தில் சென்னை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், இன்று திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நீலகிரி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடல், கேரளம், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் இன்றும், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகள், கேரளம், கர்நாடகம் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில், இன்றும், நாளையும் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்