12 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம்..

380

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடித்து வருவதால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என்று தெரிவித்துள்து.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரத்தின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.