15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை மையம்

708

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.