வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது

466

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக் கடலில் அந்தமான் அருகே புதியதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை முதல் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.