மணமேடையில் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்.. பரபரப்பான கல்யாண வீடு..

5939

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று திருமணம் நடைபெற்றது. அப்போது, மணமகன் தாலி கட்டும் போது, அதை தடுத்தி நிறுத்திய மணப்பெண், தான் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார்.

தான் சென்னையில் பணிபுரிந்த போது, பார்த்திபன் என்ற நபரை காதலித்ததாகவும், அவர் சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும், அவரை இதே மேடையில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் செய்வதறியாது அங்கிருந்து எழுந்துச் சென்றார். கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement