ரயில்வே மேம்பாலம் கிணறானது… மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கிராமங்கள்!

211

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்துகுட்பட்டு மூன்று கிராமங்கள் உள்ளன. அந்த மூன்று ஊருக்கு செல்ல வேண்டுமானல் ரயில்வே கிராசிங்கை கடந்து தான் போக வேண்டும் என்ற நிலை இருந்தது.இதனால் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு ரூ 1.60 கோடி செலவில் சுரங்கப் பாதை அமைத்து கொடுத்து அது பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்களே ஆனநிலையில் தற்போது மழையால் உள்ளே புகுந்து தண்ணீர் வெளியேரா வழியில்லாமல் உள்ளேயே தேங்கி நிற்கிறது இதனால் அவ்விடத்தில் நீர் ஊற ஆரம்பிக்கிறது.இது போல் இருந்தால் மேலே உள்ள ரயில்வே பாலத்திற்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. தற்போது கிணறாக உருமாறிவிட்டது.

இதனால் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு செல்ல கிணற்றில் இறங்கி தான் செல்ல வேண்டி நிலை இருக்கிறது என்று வருத்ததுடன் தெரிவிக்கின்றனர். துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.