நடுவானில் வழி தவறிய மம்தாவின் ஹெலிகாப்டர்! பாதுகாப்பு குறித்து விசாரிக்க உத்தரவு

640

கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் ”தினாஜ்பூர்” பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இன்று மம்தா முதலில் சிலிகுரி பகுதியில் இருந்து வடக்கு தினாஜ்பூரில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியுள்ளது.

அதன்பின் பீகார் எல்லைக்குள் அந்த ஹெலிகாப்டர் நுழைந்தது. பின் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு விழா மேடையை கண்டுபிடித்து அந்த ஹெலிகாப்டர் வந்தது. சுமார் 22 நிமிடம் தாமதமாக அவர் விழா மேடைக்கு வந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. காலதாமதமாக வந்த மமதா தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் நடந்ததை அப்படியே சொல்லி மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement