வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக மம்தா தலைமையில் அமைதி பேரணி

479

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மாலை கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாய்களில் கருப்புத்துணி கட்டியவாறு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.