கேப்டனா இருந்தது குத்தமா…, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனின் பரிதாப நிலை?

585

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆண்டிகுவாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும்  இண்டீஸின் அதிரடியை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை அடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை தன்வசமாக்கிக்கொண்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி, செயின்ட் லூசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள  நிலையில், ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என ஐசிசி அதிரடியாக  தடை விதித்துள்ளது.

இதனால், லூசியாவில் நடைபெற உள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக கீமோ பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டன் கிரைக் பிராத்வெயிட் பொருப்பு கேப்டனாக பதவிவகித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வாரா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

வாஸவுட்டை தவிர்க்க கடும் வலைப்பயிற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of