ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போன ‘மோடி ஆடு’..!

73147

பெருந்தொற்று பரவல் காரணமாக முடங்கிக் கிடந்த இறைச்சி விற்பனை தொழில், தற்போது மீண்டும் விறுவிறுப்பாக்கி வருகிறது. அந்த வகையில், மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் உள்ள அட்பாடி என்ற சந்தை நேற்று தொடங்கப்பட்டது.

இந்த சந்தையில், பலரும் தங்களது கால்நடைகளை விற்பனை செய்வதற்கு, கூட்டம் கூட்டமாக கிளம்பி வந்தனர். அப்போது, பாபுராவ் என்ற நபர், நன்றாக வளர்ந்துக்கிடந்த மோடி என்ற ஆட்டை விற்பனைக்கு எடுத்து வந்தார்.

ஏலத்தில் விடப்பட்ட இந்த ஆட்டுக்கு 70 லட்ச ரூபாய் வரை, விற்பனைக்கு கேட்கப்பட்டது.

ஆனால், அதன் உரிமையாளர் 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வேன் என்று முரண்டு பிடித்தார். இறுதியில், யாரும் அந்த ஆட்டை வாங்க முன்வராததால், ஆட்டோடு, அதன் உரிமையாளர் கிளம்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement