சென்னையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் – வனத்துறை மீட்பு

237

நீலாங்கரை அடுத்த கானத்தூர்  கடற்கரையில் இன்று காலை 22 அடி நீளம் மற்றும் ஒன்றரை டன் எடையுள்ள நீல திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனால் மீனவப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து மீனவர்கள்  காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் இறந்து கிடந்த திமிங்கலத்தை JCB இயந்திரமூலம் மீட்டு, கடற்கரையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.