திமிங்கலத்தின் வாந்தி 1.70 கோடி ரூபாய்! மலைக்க வைக்கும் ‘வாந்தியின்’ சீக்ரட்!

978

கடலில் உள்ள உயிரினங்களில் பெரிய அளவில் உள்ள உயிரிணம் திமிங்கலம். இதன் வாந்தியின் மதிப்பு ரூபாய் 1.70 கோடி ஆகும். எதற்காக இவ்வளவு விலையில் திமிங்கலத்தின் வாந்தி விற்கப்படுகிறது என்று கேள்வி எழுகிறதா.

ஆம், திமிங்கலத்தின் வாந்தி, அதன் விந்தணுச் சுரப்பில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கியது. இது, வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

இந்நிலையில் மும்பையின் வித்யா விஹார் ரயில் நிலையம் அருகே திமிங்கல வாந்தியை விற்பதற்காக ஒரு நபர் காத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த நபரிடம் இருந்து கல் போன்ற ஒரு பொருளைக் கைப்பற்றினர்.

மொத்தம் ஒரு கிலோ மற்றும் 130 கிராம் எடையுள்ள அந்தப்பொருள்தான் திமிங்கல வாந்தி என்றும், அதன் மதிப்பு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் என்றும் தெரிய வந்தது.

அதனை செண்ட் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்களிடம் விற்பதற்காக காத்திருந்த அந்த நபரின் பெயர் ராகு கிருஷ்ணா துஃபேர் என்று தெரிய வந்தது. அவரிடம் இருந்து அந்தப்பொருளை கைப்பற்றிய போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of