திமுக இத்தனை இடங்களை கைப்பற்றி என்ன பயன் – அன்புமணி

381

திமுக இத்தனை இடங்களை கைப்பற்றி என்ன பயன், இதுவரை அவர்கள் பிரதமரிடம் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி கிரிசமுத்திரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அன்புமணி, தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்குகளைப் பெற்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

திமுக எத்தனை இடங்களை கைப்பற்றியதில் என்ன பயன் என கேள்வி எழுப்பினர் அன்புமணி, இதுவரை அவர்கள் பிரதமரிடம் எந்த கோரிக்கையும் முன்வைக்க வில்லை என குற்றம்சாட்டினார்.