காற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..! அதிர்ச்சியளிக்கும் சிறப்புத் தொகுப்பு..!

2142

காற்று மாசு…. இதன் அபாயம் டெல்லியை தாக்கியது மட்டுமல்ல தமிழகத்தையும் தாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. காற்று மாசு என்றால் என்ன? அதன் அபாயம் எந்த அளவு நம்மை தாக்கும் என்பதை இந்த எச்சரிக்கை செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….

திபாவளிக்கு பிறகு டெல்லியில் தலைப்பு செய்தியாகவே இருப்பது மிக கொடிய நிலையில் உயிர்கொல்லியாகவே இருக்கும் காற்று மாசு. ஒரு நபர் நாளொன்றுக்கு 40-50 சிகரெட் பிடித்தால் எவ்வளவு புகை ஏற்படுமோ, அந்தளவு புகை டெல்லி முழுவதுமே நிரம்பி இருப்பதாக் சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் 0-50 வரை தரக்குறியீடு இருந்தால் அது சுவாசிக்க நல்ல காற்று. ஆனால் டெல்லியில் 1000 க்கும் மேல் இருக்கும் தரக்குறியீடு, அங்கு தினமும் அபாயகரமான காற்றை மக்கள் சுவாசிக்கிறாரகள் என்பதை எச்சரிக்கையாகவே காட்டுகிறது. மாசுபட்ட காற்றில் பல விதமான் நுந்துகள்கள் இருக்கும்.

காற்றில் உள்ள நுண்துகள்கள் PM என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.
PM என்பது PARTICULATE MATTER என்பது பொருள்

காற்றில் மிதக்கும் திடப்பொருள்கள் மற்றும் திரவ துளிகளின் கலவை கணக்கெடுப்பே PM என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

அதனடிப்படையில் ஒரு மீட்டர் சதுர பரப்பளவில் 10 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் இருந்தால் அது சுவாசிக்க நல்ல காற்று.

டெல்லியில் சராசரியாக 450 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் ஒரு மீட்டர் சதுர பரப்பளவில் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்கே தெரியாத பெரிய மற்றும் சிறிய அளவிலான இந்த நுண்துகள்கள் நாம் சுவாசிக்கும் போது நம்முடைய மூக்கு, மூச்சு குழாய், நுறையீரல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிடுகிறது. ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற தீவிர சுவாச பிரச்சினைகள் அழையா விருந்தாளியாக நம் உடலில் தங்கிவிடுகிறது.

கடுமையான சட்டங்களை கொண்டுவந்தால் காற்று மாசுவை ஓரளாவு குறைக்கலாம் என எண்ணிய டெல்லி அரசு வாகன சட்டதிட்டம் கொண்டுவந்தது, ஆனால் அதுவும் பயன் தரவில்லை. காற்று மாசுவில் இருந்து எதிர்வரும் சந்ததிகளை பாதுகாக்க அவ்வபோது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபடுகிறது.

டெல்லியின் அண்டை மாநிலமான பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பொது வெளியில் விவசாய கழிவு பொருட்களை எரிப்பது, கடுமையான வாகன பெருக்கம், தீவாளியின் போது வெடிக்கபட்ட பட்டாசுகள், தொழிற்சாலைகள் கக்கும் புகை என காற்று மாசுவுக்கு பல காரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அண்டை மாநிலமான டெல்லியை இவ்வளவு கடுமையாக தாக்கும் காற்று மாசு தமிழகத்தையும் தாக்க கூடுமா என்று நமக்கு சராசரியாக ஒரு கேள்வி எழுகிறது. ஆனால் இந்த காற்று மாசு தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிக குறைவு என்பதே வானிலை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது, அதேசமயம் மழை பெய்தால் இந்த காற்று மாசு சற்று குறையும் என்றும் கூருகிறார்கள்.

டெல்லியில் தானே காற்று மாசு இருக்குறது நம்கென்ன பிரச்சனை என்ற அலட்சிய போக்கில் நாம் இருக்காமல், நம்முடைய பூமியை காக்கும் முயற்சியாக மரம் நடுவது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தான் வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.

Advertisement