அஜினமோட்டோ நல்லதா..? கெட்டதா..? ஒரு சிறப்பு தொகுப்பு..!

1739

130 நாடுகள், 20 நாடுகளில் நம்பர் ஒன் பிராண்ட், குறைந்தபட்சம் 40 கோடி பேர் பயன்படுத்துராங்க…. ஆனாலும், அஜினமோட்டோன்னு சொன்னவிடனேயே, சர்ச்சைதான் முதலில் கண்முன்வருது…

இந்த சர்ச்சைகள் குறித்த பார்ப்பதற்கு முன்னால், முதலில், அஜினமோட்டோ என்பது ஒரு நிறுவனத்தோட பெயர்.. அதன் தயாரிப்பான இயற்கையியல் உப்பான MSG. எனும் மோனோ சோடியம் குளுட்டோமேட் என்பதுதான் சர்ச்சையான பொருள்னனு தெரிஞ்சுக்கனும்.

ஏன்னா, நம்மில் பல பேர் எம்.எஸ். ஜி உப்பு பெயரே, அஜினமோட்டோன்னு நினைச்சிட்டு இருக்கோம்.. அஜினமோட்டோ மாதிரி பல நிறுவனங்கள் இந்த எம்.எஸ்.ஜி உப்ப தயாரிக்கிறாங்க… இந்த எம்.எஸ். ஜி என்பது, உணவுக்கு ஒரு சுவைக்கூட்டான் போல் செயல்படுகிறது.

சுவைக்கூட்டான் என கூறப்படும் இந்த எம்.எஸ்.ஜி-யால் அலர்ஜி எனும் ஒவ்வாமை முதல் புற்றுநோய் வரை வருவதாக பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

உணவு தரத்தை நிர்ணயிக்கும் பல்வேறு நிறுவனங்கள் அஜினமோட்டாவின் எம்.எஸ்.ஜி-யால் பிரச்சனை இல்லைன்னு சொல்ரதா, அந்நிறுவனம் சொன்னாலும், மேகி நூடுல்ஸ் பிரச்சினை வந்ததில் இருந்தே, அஜினமோட்டோன்னாலே, ஒருவித சர்ச்சை தொடர்ந்து இருக்கு…

தற்போது கூட, தாய்லாந்தில் உள்ள சர்வதேச தரத்துடன் கூடிய அஜினிமோட்டா நிறுவனத்தில் இருந்துதான், எம்.எஸ். ஜி தயாரிப்புகள், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறதாம்.

தற்போது, இந்தியாவில் எம்.எஸ்.ஜி எனும் சுவை கூட்டான் விற்பனை, ஆண்டுக்கு10 ஆயிரம் டன்களாக இருக்கிறது. இதில், அஜினமோட்டாவின் பங்கு, வெறும் 10 சதவீதம் என்றும், கலப்படங்களின் ஆதிக்கத்தால், நல்ல நிறுவனங்களுக்கு கெட்டப் பெயர் எனக் கூறுகிறது அஜினமோட்டோ நிறுவனம்.

உணவு தர நிறுவனங்கள் என்னதான் சான்றிதழ்கள் தந்தாலும், வாடிக்கையாளர் மனதில் அஜினமோட்டோ எம்.எஸ்.ஜி சுவைக்கூட்டான் என்றாலே ஒருவித அச்சம் இருக்கிறது என்பதுதான் யதார்த்த கள நிலவரம்.

இந்தியாவின் உணவு தர கட்டுப்பாடு அமைப்புகூட, எம்எஸ்ஜி சேர்க்கப்பட்டிருக்கிறது என்ற முத்திரையுடன்தான் குறிப்பிட்ட பொருட்களை விற்க வேண்டும் எனக் கூறியிருப்பதையும் நினைக்காமல் இருக்கமுடியவில்லை…

என்னதான் விற்பனைக்கு பல திட்டங்கள் வைத்தாலும், இந்திய வாடிக்கையாளர் மனதில் நம்பிக்கையான இடத்தை அஜினமோட்டோ பிடிப்பது என்பது மிகப்பெரிய சவால்தான்…