இந்தியாவில் கொரோனா – தற்போதைய நிலை என்ன..?

546

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 240 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 637ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 302 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கேரளாவில் 241 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையால்,133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of