ஒரு டிஎம்சி என்றால் என்ன ?

2186

அடிக்கடி டிஎம்சி.. டிஎம்சி.. என்கிறார்களே அப்படி என்றால் என்ன? அது எந்த அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது.

ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக் பீட். அதை தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். புரியும்படி தெளிவாக கூறினால் 100 கோடி கன அடி நீர்.

ஒரு கன அடி நீர் என்பது 28.3 லிட்டர், ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர். அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம்.

இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடைக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.

அதுமட்டும் இன்றி ஒரு டிஎம்சி தண்ணீரை பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய் என்று விலை வைத்தால் சுமார் 56 லட்சத்து 600 கோடி ரூபாய் கிடைக்கும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of