சன்டே பாஸ்ட் புட் சாப்பிட போறீங்களா..? உங்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி..!

315

இன்றை காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அணைவருமே பாஸ்ட் புட் உணவுகளுக்கு அடிமையாகியே உள்ளனர். இந்த வகை உணவுகள் இவ்வளவு அசுர வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் அதன் சுவை தான்.

இந்த வகை உணவுகளில் சுவை அதிகம் ஏற்படுத்த எம்எஸ்ஜி என்ற ஒரு வகை உப்பை பயன்படுத்துகின்றனர். அது சீன உப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த உப்பை பயன்படுத்துவதால் உடல்நலப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இந்த உப்பை தடை செய்யவும் அரசு பரிசீலனை செய்து வருகின்றது. இதுகுறித்து ஊட்டசத்து நிபுனர்கள் கூறும்போது, எம்.எஸ்.ஜி என்பது சுவையை கூட்டக்கூடிய ஒரு வகையான உப்பு. இந்த உப்பை நம் பயன்படுத்தலாமா அல்லது பயன்படுத்தக்கூடாதா என்ற கருத்து பல்வேறு காலங்களாக விமர்சனத்திற்கு வைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக நம் உணவுகளில் சோடியம் குளோரை அதாவது சாதாரண உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த எம்எஸ்ஜி வகை உப்பை உபரியாக பயன்படுத்தும் போது சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுனர்கள் கூறுகின்றனர்.

உப்பை அளவிற்கு மீறி பயன்படுத்தும் போது பிரச்சனைகள் ஏற்படுவது என்பது இயல்பு தான் என்றும் ஒரு சில கருத்து சொல்லப்பட்டு வருகின்றது. எந்த உணவாக இருந்தாளும், அளவுக்கு மீறி உண்ணும் போது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எம்.எஸ்.ஜி அதிகம் பயன்படுத்துவதால் வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, நரம்புக் கோளாறுகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, ஹஎம்.எஸ்.ஜியை உணவில் அதிகம் சேர்க்காமல் தவிர்ப்பது நல்லது. ஏற்கெனவே சோடியம் உப்பை பயன்படுத்தும்போது இன்னோர் உப்பு நமக்குத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுரை அளிக்கின்றனர்.