குழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..? பயமுறுத்திய ஆய்வறிக்கை..!

647

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் உழைப்பை பயன்படுத்தி வேலை செய்வதில்லை. எல்லாவற்றிற்கும் தற்போது எந்திரங்கள் வந்துவிட்டது. இதனாலேயே உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாம் தான் இப்படி எந்திர வாழ்க்கையில் மூழ்கி உள்ளோம் என்றால், நமது குழந்தைகளும் அந்த வாழ்க்கை முறையில் தான் சிக்கித் தவிக்கின்றனர்.

ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் பெரும்பலானா குழந்தைகள், செல்போன் அல்லது டிவி பார்ப்பதை தான் வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி டிவி பார்ப்பதனால் நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஹைபர்-ஆக்டிவ் அல்லது நடத்தையில் சிறிது பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்து குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், தங்களது  7 வயதுக்குள் 10 சதவீத குழந்தைகள் இப்பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

மேலும், பள்ளி மற்றும் படிப்பின் மீதான ஆர்வம் குறையவும், முரட்டுத்தனம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, சரியாக தூக்கமின்மை, உடலில் பருமன் அதிகரித்தல், மொழி திறன் குறைதல், சிந்திக்கும் திறன் குறைதல், பார்வை குறைபாடு ஏற்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

அதற்காக குழந்தைகளுக்கு தொலைக்காட்சியை காட்டாமலும் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு தேவையான நிகழ்ச்சிகளை தேர்வு செய்து, அதனைக் காட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கருத்து கூறுகின்றனர்.