கமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..? வைரலாகும் தகவல்..!

1342

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபர்களின் பட்டியலை தயார் செய்தால், அதில் முன்னணியில் இருப்பவர் நடிகர் கமல் ஹாசன். நடிப்பில் தொடங்கிய அவரது பயணம், இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ளது.

பல்வேறு பயணங்களைத்தொடர்ந்து தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி மக்களவை தேர்தலையும் சந்தித்து விட்டார்.

தங்களது கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறவர்களோடு தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று கூறும் நடிகர் கமல் ஹாசன், பல்வேறு மேடைகளிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் பாஜகவின் திட்டங்கள் குறித்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல் குறித்து நெட்டிசன்கள் புதிய கிசுகிசுப்புகளை பரப்பி வருகின்றனர். அதன்படி, நடிகர் கமல் png என்று கூகுளில் தேடினால், கமலின் png உருவத்திற்கு பதில் தாமரையின் png உருவம் வருகிறது. இதனால், இவருக்கும் தாமரைக்கும் ஏதே தொடர்பு இருக்கிறது என சூசகமாக தகவல் பரப்பி வருகின்றனர்.

ஆனால், இதன் உண்மை தன்மை என்னவென்றால், தாமரை மலருக்கு கமலம் என்ற மற்றொரு பெயர் உள்ளது. அதுமட்டுமின்றி தாமரை மலருக்கு ஹிந்தி மொழியில் கமல் என்று அர்த்தம். இதனால் தான் கமல் png என தேடினால் தாமரையின் png உருவம் கிடைக்கின்றது.

இதனையறியாத ஒரு சிலர் கமலுக்கும், தாமரைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சொல்லித்திரிகின்றனர். உண்மையில் சொல்ல வேண்டுமானால், கமலுக்கும், தாமரைக்கும் இடையே உள்ள தொடர்பு பெயர் அளவில் மட்டுமே என்பது இன்றைய அளவில் வெளியான தகவல்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of