பங்குச்சந்தை என்றால் என்ன..? சிறப்புத் தொகுப்பு..!

2626

பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்போகிறேன், பங்குகளை வாங்க இருக்கிறேன் என்றெல்லாம் பிறர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு பங்குச்சந்தை என்றால் என்ன என்பது தெரியாது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

பங்குசந்தை என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, நாம் பங்கு என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். பங்கு என்றால், ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள, அதன் பெயரில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை உருவாக்கி மக்களிடம் விற்பனை செய்யும்.

அந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தின் பெயர் தான் பங்கு என்றும், அதனை விற்பனை செய்யும் இடத்தின் பெயர் தான் பங்குசந்தை என்றும் அழைக்கப்படுகிறது.

இன்னும் விளக்கமாக புரிந்துக்கொள்வதற்கு ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். ராமு என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தனது ஹோட்டல் தொழிலை மேம்படுத்துவற்காக, மக்களிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கிவிட்டு, அவர்களிடம் அந்த ஹோட்டலின் பெயரில் ஒரு ரசீதை தருகிறார்.

பிறகு அந்த ஹோட்டல் தொழிலில் ஈட்டும் லாபத்திற்கு ஏற்றவாறு, அவர்களிடம் ரசீது பெற்றவர்களுக்கு பணம் அளிக்கிறார். ஆனால், லாபம் குறைவாக பெற்றால் அதற்கேற்றவாரு தான் பணம் அளிக்கப்படும் என்றும் ராமு நிபந்தனை வைக்கிறார்.

இதன்மூலம் ராமுவிற்கு பணம் அளித்தவர்கள், அவரது மறைமுக பார்ட்னராக மாறி விடுகின்றனர். இது தான் பங்கு சந்தையில் முதலீடு செய்யும்போது நிகழ்கிறது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பங்குகளை விற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடும்.  அப்போது, பங்குகள் வேண்டும் என்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

பிறகு விண்ணப்பித்தவர்களில் ஒருசிலரை மட்டும் அந்நிறுவனம் தேர்வு செய்து, அவர்களிடம் தவணை முறையில் பணம் பெற்று பங்குகளை விற்பனை செய்கிறது. ஆனால் இது ஆரம்ப கட்ட நிறுவனங்களிலேயே நடக்கும். உயர் மட்ட நிறுவனங்களின் பங்குகள், இடைத்தரகர்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் வாங்க முடியும். பொருளாதார வளர்ச்சியை பொறுத்து ஒரு நாட்டின் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படும்.

குறிப்பு :- இதனை தவறான முறையில் பயன்படுத்திக்கொள்பவர்களும் உண்டு. ஒருவர் பெரிய அளவில் நிறுவனத்தை உருவாக்குவதாக, பொதுமக்களிடம் வாக்கு அளித்துவிட்டு, பங்குகளை விற்பனை செய்வார்.

ஆனால், பங்குகள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை, அந்த தொழிலில் முதலீடு செய்யாமல், நஷ்டம் ஏற்பட்டதாக கூறி மோசடி செய்து விடுகிறார். இதனால், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், அந்நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of