“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..? சிறப்புத்தொகுப்பு..!

1718

தீபாவளியன்று ஒட்டுமொத்தமாக பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசடைவதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தான் பசுமை பட்டாசுகளை தயாரிக்க கடந்தாண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறித்தியிருந்தது.

அதன்படி உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை கடந்த 2 வாரத்திற்கு முன்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்து வைத்து பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வாங்கி பயன்பெற வேண்டும் எனவும் ஒரு கோரிக்கை விடுத்தார்.

அது என்ன பசுமை பட்டாசு? பாரம்பரிய வகை பட்டாசுகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி நம்மிடையே எழக்கூடியவை தான். ”நீரி” எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பசுமை பட்டாசுகளை கண்டுபிடித்துள்ளன.

பசுமை பட்டாசுகள் எப்படி இருக்கும் என்றால்?

பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும். வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் என்பது மாசு குறைவாக இருக்கும்.
சாதாரணமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது 40 முதல் 50 சதவீதம் குறைவான நச்சு வாயுவை வெளியிடுகிறது.

பசுமை பட்டாசுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பே ஏற்படுத்தாவை என்றோ கூறிவிடமுடியாது என நீரி தகவல் தெரிவிக்கிறது.

பசுமை பட்டாசுகளின் எத்தனை வகைகள் உள்ளன:

வாட்டர் ரிலீசர் என்ற பட்டாசு வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடுகிறது. அதில் உள்ள சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைவதால் மாசை குறைக்க முக்கிய காரணியாக தண்ணீர் கருத்தப்படுகிறது.

ஸ்டார் வகை பசுமை பட்டாசுகளில் ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் இதனை வெடிக்கும் பொழுது கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான மாசு வெளிப்படுகிறது.

அரோமா பட்டாசு வெடிக்கும் போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணம் வரக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பசுமை பட்டாசு சாதாரண பட்டாசுகளின் விலையை காட்டிலும் 5 சதவீதம் விலை உயர்ந்தவையாகும். இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் வியாபாரம் மந்தநிலையில் உள்ளதாக கூறுகிறார் பட்டாசு விற்பனையாளர் சங்க செயலாளர் அசான் அலி

இந்த பட்டாசு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கேட்டபோழுது சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்துவதற்காகவும், குழந்தைகள் வெடிப்பதற்கு ஏதுவாக பல ரகங்களில் இந்த பட்டாசுகள் இருப்பதால் வாங்கி செல்வதாகவும், குறைந்த அளவே விற்பனைக்கு வந்துள்ள இந்த பட்டாசுகளை அரசு முழுவதுமாக கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், சுற்றுச்சூழலை பாதிக்காத இதுபோன்ற பசுமையை வளர்க்க கூடிய பட்டாசுகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குரல் எழுந்தால் மட்டுமே முழுமையான மாசுஇல்லாத நாடாக இந்தியா மாறும் என்பதில் மாற்று கருத்தில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of