மக்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?

2578

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் கடற்பாசியில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையை பார்வையிட்டு, கூடுதல் உற்பத்தி நிலையம் அமைபதற்கான திட்ட பணியினை மத்திய மீன் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், கடற்பாசி தொழிலில் ஈடுபடும் பெண்களின் மாத வருமானத்தை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என கூறினார்.

கடற்பாசி மூலம் இயற்கை உரம் தயாரிப்பதற்கு மத்திய – மாநில அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆண்டிற்கு 20 லட்சம் லிட்டர் இயற்கை உரம் உற்பத்தியை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

ரசாயன உரங்கள் மூலம் பஞ்சாப்பில் அதிகளவில் கோதுமை உற்பத்தி செய்யப்படுவதாக கூறிய கிரிராஜ் சிங், இதனால் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எனவே இயற்கை உரத்தை விவசாய நிலத்தில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement