ஹிட்மேன் ரோஹித்தை ஓரம் கட்ட காரணம் என்ன? இந்திய தேர்வு குழு

867

உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்ப்பார்ப்பது இந்தாண்டு நடைபெரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தான். நான்காண்டுக்கு ஒரு முறை நடைப்பெரும் இந்த உலகக்கோப்பையை தன்வசமாக்கும் அணி கிரிக்கெட் உலகின் சாம்பியன் ஆக வளம் வரமுடியும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணி தன்வசமாக்கியது. அதிகமுறை உலகக்கோப்பையை கைப்பற்றி அணியும் அது தான். இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறயுள்ள உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என அனைத்து அணிகளும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகளே மீதமுள்ளனர். ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி-20 மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. டி-20 தொடரின் முதல் ஆட்டம் வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது ஆட்டம் 27-ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

அதேவேளையில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 2-ம் தேதி ஹைதராபாத்திலும், 2-வது ஆட்டம் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது ஆட்டம் 8-ம் தேதி ராஞ்சியிலும், 4-வது ஆட்டம் 10-ம் தேதி மொகாலியிலும், 5-வது ஆட்டம் 13-ம் தேதி டெல்லியிலும் நடைபெறுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 15-ம் தேதி மும்பையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு உலகக்கோப்பையை மனதில் கொண்டே வீரர்களை தேர்வு செய்யப்படும் என கருதப்படுகிறது.

அணி தேர்வு குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்புவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருநாள் போட்டிக்கான அணித் தேர்வில் எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் உலகக் கோப்பைக்கு முன்னதாக 5 ஆட்டங்கள் மட்டுமே விளையாட உள்ளோம்” என தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நாக் ஆவுட் சுற்றில் வெற்றிப்பெறும் பொருட்டு அணியை பலப்படுத்தும் சவால் கேப்டன் கோலி முன்பாக இருக்கிறது.

உலகக்கோப்பை வெல்ல விராட் கோலி தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணி தன்னை அனைத்து துறையிலும் வலுமைபடுத்தி கொண்டு, தனது பலத்தை பதிவு செய்து வரும் சூழலில் இந்த ஆஸ்திரேலிய தொடர் ரசிகர்களிடையே பெறும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement