இலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன்! மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு!

490

தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. லேப்டாப் பெறும் மாணவர்களின் சுய விவரங்கள், கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால் மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்களா? என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, இலவச லேப்டாப் வாங்கிய மாணவர்களிடமிருந்து 15 வகையான தகவல்களை பெற வேண்டும் என்று, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

லேப்டாப் வாங்கிய மாணவர் தற்போது படிக்கிறாரா? சுயதொழில் செய்கிறாரா? என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. லேப்டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா?, லேப்டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா? என்பதை மாணவர்கள் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குள் லேப்டாப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டதா?, லேப்டாப்பை மாணவர்கள் விற்றுவிட்டார்களா? என்பன உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of