ஆகஸ்ட் 15 ல் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள் என்ன

3400

ஆகஸ்ட் மாதம்15ம் தேதி என்றால் இந்தியர்களாகிய நம் அனைவரின் நினைவுக்கு வருவது, இந்தியா பிரிட்டிஷிடம் இருந்து விடுதலை அடைந்ததும், சுதந்திர போராட்டத்திற்காக நம் முன்னோர்கள் உயிரை தியாகம் செய்ததும் தான்,

ஆனால் நம்முடன் மற்ற சில நாடுகளும் இதே நாளில் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறனர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், இதோ அதைபற்றிய சிறிய செய்தி தொகுப்பு உங்களுக்காக…

காங்கோ

80 ஆண்டுகளாக ஃப்ரான்ஸ் பிடியில் சிக்கி இருந்த காங்கோ நாடு அகஸ்ட் 15ம் தேதி கடந்த1960 ஆண்டு விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற காங்கோ நாட்டின் முதல் பிரதமராக ஃப்ல்பிர்ட் யொஉலு பதவியேற்றார்.

கொரியா

ஜப்பானின் பிடியில் இருந்த வடகோரிய மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாம் உலக போர் முடிவில் அகஸ்ட் 15ம் தேதி கடந்த 1945ல் விடுதலை செய்யப்பட்டது ஆனால் அதே நாளில்1948ம் ஆண்டே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
கோரி நாட்டின் முதல் பிரதமராக சுக்மான் ர்ஹீ என்பவர் பதவியேற்றார்.

பஹ்ரைன்

மத்திய கிழக்கு தீவு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் பிரிட்டிஸின் பிடியில் இருந்து அகஸ்ட் 15ம் தேதி 1971ம் ஆண்டு விடுதலை பெற்றது.

லிச்டென்ஸ்டெய்ன்

உலகின் மிக சிறிய நாடுகளின் ஒன்றான லிச்டென்ஸ்டெய்ன் ஜெர்மன் பிடியில் இருந்து அகஸ்ட் 15ம் தேதி 1866ம் ஆண்டு விடுதலை பெற்றது. என்பது குறிப்பிடதக்கது.

Advertisement