அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கும் முன் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சைகள் என்ன? ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

250

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் சிவகுமார் நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்கப்பட்டதாகவும், முறையான தகவல்களை கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த ஆவணங்களும் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக மருத்துவர் சிவகுமார் விசாரணை ஆணையத்தில் தெரிவித்தாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
Vovt
வெளிநாடு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படாததாலும், வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களும் அதுகுறித்து எதுவும் கேட்காததால் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லவில்லை என்று மருத்துவர் சிவகுமார் பதில் அளித்ததாக குறிப்பிட்டார். மேலும் 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை விசாரணை ஆணையம் கேட்டதால், அது தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.