2040 இல் மனிதர்களின் நிலை எப்படி இருக்கும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

743

 

நாம் வாழும் இந்த உலகம் மிகவும் அழகானது மட்டுமில்லாம் மிகவும் பாதுகாப்பானது என்று பொய் சொல்ல முடியாது. அதே நேரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்பதை சொல்லாமல் இருக்கு முடியாது.

யானை எப்படி தன் தலையில் தானே மண்ணல்லி போட்டுக்கொள்கின்றதோ அதுமாதிரி மனிதனும் அவனுக்கு அவனே ஆபத்தை உருவாக்கிக்கொண்டான். ஆடம்பரத்தை அதிகரித்து கொண்டு ஆயுட்காலங்களை குறைத்துக்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் இங்கு வாழும் மனிதன் குறைந்த பட்சம் 50 வயது வரையாவது வாழ்வதற்காக அம்சங்கங்களுடன் உள்ளது.

உலகத்தை, கடைசி வரை நாம் வாழ்வதற்கு ஏற்றது போன்று வளைத்து கொண்டிருக்கிறோம். பல பகுதிகளில் இருந்து பல தரப்பட்ட மக்கள் உலகத்தை இழுத்துக் கொண்டு இருப்பதால், ஒரு கட்டத்தில் அது ஒடித்து விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

உலகத்தின் நிலையே இவ்வளவு மோசமாக உள்ளது என்றால், அதில் வாழும் நமது நலன் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால், இந்த ஒரு ஜென்மம் மட்டும் போதும் இறைவா என்று வேண்டும் அளவுக்கு உள்ளது.

இந்த பூவுலகில் 2040-ல் வாழும் மனிதர்களின் நலம் எப்படி இருக்கும், என்ன நோயினால் அவர்கள் இறக்கின்றனர் என்பது பற்றி ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது.

உலகத்தில் உள்ள மொத்தம் 175 நாடுகளில், மக்கள் தொகை கணக்கெடுப்பது போன்ற முறையை இந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சீனா, ஜப்பான் உட்பட்ட நாடுகளில் இருபாலருமே அதிகபட்சமாக 85 வயது வரை ஆயுட்காலம் இருக்குமாம்.

உலகில் வரும் 2040 ஆம் ஆண்டில் இதய நோய்கள், சுவாச கோளாருகள், நுரையீரல் பிரச்சனைகள், நீரிழிவு மற்றும் சாலை விபத்துகள் மூலமாக உயிரிழப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி பல பெயர் தெரியாத நோய்களும் பரவும் என்று ஆய்வின் முடிவில் வெளியானது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of