Status-ல Train விடுபவரா நீங்க..? உங்களுக்கான முக்கிய செய்தி..! வாட்ஸ்-அப் அதிரடி முடிவு..!

499

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால், பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் எடுத்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவை பல்வேறு நாடுகள் அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவிலும், ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால், வீட்டில் இருக்கும் நபர்கள் டிவிக்கள் பார்த்தும், சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டும் பொழுதுபோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் அதிரடி டுவீட் ஒன்றை போட்டுள்ளது. அதில், வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைக்கும் போது இனி 15 நொடிகளுக்கு மட்டுமே வீடியோக்களை பதிவிட முடியும் என்றும், நெட்வொர்க் டிராப்பிக்கை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் மட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய வாட்ஸ் அப் நிறுவனம், இது தற்காலிக மாற்றம் என்றும் கூறியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of