பிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி..! வாட்ஸ் அப்பின் அதிரடி முடிவு..!

814

சீனாவில் தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் செயலி, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. இதையடுத்து, அதில் பல்வேறு அப்டேட்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, புதிய பிரைவசி பாலிசியை கொண்டு வந்த அந்நிறுவனம், அதனை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது.

அதாவது, பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு, மே 15 வரை நீட்டிக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.

மேலும், என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை பயனர்களுக்கு வழங்கும் குறிக்கோள் கொண்டிருக்கிறோம். எங்களிடம் கருத்துக்களை எடுத்துரைத்த அனைவருக்கும் நன்றி என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement