வந்தது புது அப்டேட்..! இனி வாட்ஸ் அப்பிலும் பணம் செலுத்தலாம்..!

845

கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் போன்று வாட்ஸ் அப் பே என்ற புதிய செயலிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இனி வாட்ஸ் அப் மூலமாகவும் பண பரிவர்த்தனை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த செயலி மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் குறித்த ஆய்வுகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வந்தன.

இந்நிலையில் UPI மூலமாக பணபரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ் அப் வழங்க மத்திய அரசின் N.P.C.I. அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இனி வாட்ஸ் அப் பே மூலமும் சுலபமாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

Advertisement