வாட்ஸ்-அப் இனி இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது! உங்க போன் இதில் இருக்கான்னு செக் பண்ணுங்க!

881

2020 ஆம் ஆண்டு முதல், சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும், I- Phone -களிலும் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


2016ஆம் ஆண்டு, Black Berry, Nokia ஸ்மார்ட் போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், Windows இயங்கு தளத்தில் உள்ள நோக்கியா லுமியா போன்களிலும், ஆண்ட்ராய்டு 2.3.7 Version-ல் இயங்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் சேவை ரத்தாகிறது.

I Phone-களில் ஐ.ஓ.எஸ் 8 பிரிவிலும் வாட்ஸ் அப் செயலி வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் புதிய வாட்ஸ் அப் கணக்குகளை தொடங்க முடியாது, ஏற்கனவே இருக்கும் கணக்குகளை Update செய்யவும் முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.

ஜியோ போன், ஜியோ போன்2 ஆகியவற்றில் செயல்படும் K.A.I.S – 2.5.1 ஆகிய ஆப்ரேட்டிங்க் சிஸ்டத்திலும் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of