வாட்ஸ்-அப் பயணர்களுக்கு வந்த புதிய ஆபத்து.., உடனே அப்பேட் பண்ணுங்க

1528

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத
ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை
என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு
கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.

இந்நிலையில், வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் திடீர் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. ஹேக்கர்கள் சிலர் வாட்ஸ் அப் மூலம் பயனர்களின்
செல்பேசியில் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக தனது பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வரும் வாட்ஸ் அப்,
நீண்ட காலமாக அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்யுமாறு
வேண்டுகோள் விடுத்துள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து
ஹேக்கிங் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், செல்போனில் குறிப்பிட்ட
சாப்ட்வேர் தானாகவே இன்ஸ்டால் ஆகும் என்றும் எச்சரித்துள்ளது.

இதனால் பயனர்கள் அனைவரும் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட்
செய்யுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.