வாட்ஸ்-அப்பின் அசத்தல் அப்டேட்..! – கொண்டாட்டத்தில் வாட்ஸ்-அப் பயனாளர்கள்..!

538

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் கொடுத்து அசத்த இருக்கிறது.
வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு அசத்தல் அப்டேட்களை அடிக்கடி கொடுத்து பயனாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

இதுவரை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்பட்டு வந்த பூமராங்க் வீடியோ வாட்ஸ் அப்பிலும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் களிலும் வைப்பதற்கான வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வினாடிகளில் உருவாக்கப்படும் பூமராங் வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் iOS பயனாளர்களுக்கு இந்த வசதி வரும் என்றும் அதற்கு பின்னர் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வாட்ஸ்-அப் பயனாளர்களிடையே மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.