“அரசு பேருந்து.. தனியார் பேருந்து..” சீக்ரெட்டை சொன்ன ஷரத்தா ஸ்ரீநாத்..!

589

நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா உள்ளிட்ட மாபெரும் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷரத்தா ஸ்ரீநாத். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், கூட்டமே இல்லாத தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதை விட, கூட்டம் இருக்கும் அரசு பேருந்துகளிலேயே தான் பயணம் செய்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்த முழு விவரம் பின்வருமாறு:-

“நான் நெட்பிளிக்ஸ் தளத்தில் டெல்லி கிரைம் என்ற படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது நிர்பயா வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தை பார்த்தபோது எனக்கு சில விஷயங்கள் மனதில் தோன்றியது.

நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வந்தேன். அப்போது, கூட்டமாக இருக்கும் அரசு பேருந்துகளில், செல்வதற்கு நான் விரும்ப மாட்டேன்..

ஆனால், அதே சமயம் கூட்டமே இல்லாத தனியார் பேருந்து வந்தாலும் அதில் பயணம் செய்ய விரும்ப மாட்டேன். அதற்கு பதிலாக கூட்டமாக இருக்கும் அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்து விடுவேன். தற்போது அந்த தனியார் பேருந்துகளில் பயணம் செய்யமால் இருந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுமட்டுமின்றி, தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாலும், நான் அந்த பேருந்துகளில் பயணம் செய்ய விரும்ப மாட்டேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of