முகிலன் எங்கே ? ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் போராட்டம்.

296
mugilan-3.3.19

சுற்றுச்சூழல் போராளி முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர் சுற்றுச்சூழல் போராளி முகிலன்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னையில் வீடியோ வெளியிட்டார். பின்னர் ரயில் மூலம் மதுரை புறப்பட்ட முகிலன் மாயமானார்.

முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முகிலன் எங்கே என்று வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி தமிழர்கள் கோஷங்கள் எழுப்பினர்.