பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா..? உடனிருந்தவர் அளித்த வாக்குமூலம்..!

1691

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு என்ன ஆனது என்பதில், பலருக்கும் இன்னும் சந்தேகம் இருக்கிறது.

இந்த நிலையில், இலங்கைக்குச் சென்றிருந்த எமது தலைமை செய்தி ஆசிரியர் ஷண்முகசுந்தரம் தலைமையிலான சத்தியம் செய்திக்குழு, தற்போது உயிரோடு இருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பின் இரண்டாம் கட்ட முக்கிய நிர்வாகிகளில் பிரதானமான ஒருவரைச் சந்தித்தனர்.

அந்த நிர்வாகியின் ஒப்புதலுடன், தலைவர் பிரபாகரனுக்கு கடைசி கட்டத்தில் நடந்தது என்ன என்பது முதல் மேலும் சில முக்கிய கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில் இந்த நேர்காணல் அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதேபோல், தமக்கும் தமது குடும்பத்தினர் உயிருக்கும், ராணுவம் மற்றும் இலங்கை புலனாய்வு துறையால் அச்சுறுத்தலும் ஆபத்தும் இருப்பதால், தம்முடைய முகம், பேட்டி கொடுத்த இடம் மற்றும் தம்முடைய குரல் ஆகியவற்றை மாற்றவோ அல்லது மறைக்கவோ வேண்டும் என அன்பு வேண்டுகோளும் விடுத்தார்.

அவரது உயிருக்கும், வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து, பேட்டி கொடுத்த இடம், அவரது உருவம், அவரது குரல் ஆகியவற்றில் சிற்சில மாற்றங்கள் செய்து, சொன்னதை சொன்னபடியே வெளியிடுகிறோம் என நேயர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மை வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக வெளியாகும் இந்தப்

பேட்டி இதோ உங்களுக்காக…

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of